Podcasts · Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | ஊரப்பாக்கம் நவராத்திரி திருவிழா | நவராத்திரி நாயகி | Navratri
· 46 min
Episode முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | ஊரப்பாக்கம் நவராத்திரி திருவிழா | நவராத்திரி நாயகி | Navratri
நவராத்திரி நாயகி – அன்னை பராசக்தியின் மகிமை! அன்னை பராசக்தியின் திருவருளால், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் நடைபெற்ற நவராத்திரி பெருந்திருவிழாவில், ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் இனிய வாய்ப்பு அமைந்தது.நவராத்திரி என்பது அன்னை பராசக்தியைப் போற்றிக் கொண்டாடும் புனிதமான திருவிழா! துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என அன்னையின் பல்வேறு திருக்கோலங்களின் மகிமையையும், பெண் தெய்வ வழிபாட்டின் தத்துவத்தையும், பக்தியின் மேன்மையையும் உணர்த்தும் திருநாள்கள் இவை.அன்னையின் அருளையும், ஆன்மிகச் சிந்தனைகளையும், நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய நெறிகளையும் எடுத்துரைக்கும் இந்தச் சொற்பொழிவை முழுமையாகக் கேட்டு மகிழுங்கள்!ஊரப்பாக்கம் மக்களின் அன்பும் ஆதரவும் நிறைந்த இந்த ஆன்மிக நிகழ்வு, அன்னை பராசக்தியின் திருவருளால் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.- சொற்பொழிவாளர்: முனைவர் ரத்னமாலா புரூஸ்
Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them. Explicit shows are for adult profiles only, and children’s profiles hear only children’s shows. More about this list.