# 745 | 03 - படித்தால் மட்டும் போதுமா? | குரு சிஷ்யன் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 22 Oct 2025, 4:28.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/110059682/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-22%2F936cd950-826c-699b-1888-611f9e7d661d.mp3

இன்று கதை 100 வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. ஒரு சீடன் தனது குருவிடம் கேட்கிறான்; “நூல்கள் பல படித்தவர் வாழ்க்கையின் அனைத்தையும் அறிந்தவரா?” குரு உடனே பதில் சொல்லவில்லை. சில நாட்களுக்கு பிறகு ஒரு நகைக்கடை உரிமையாளர் தனது மகனுடன் ஆசிரமத்துக்கு வருகிறார். அந்த மனிதர் தனது மகனை அறிமுகப்படுத்தி “இவன் பல நூல்கள் படித்திருக்கிறான்” என்று சொல்கிறார். குரு சிரித்தபடி, அந்தப் பையனிடம்; “என் கையில் ஒன்றிருக்கு, அது வட்டமாகவும் நடுவில் ஒரு துளையுடனும் இருக்கு. அது என்ன?” என்று கேட்கிறார். பையன் சற்று யோசித்து “அது சக்கரம்” என்று சொல்கிறான். மற்ற சீடர்கள் சிரிக்கிறார்கள். குரு இப்போது தனது சீடனிடம் திரும்பி “நூல்கள் பல படிப்பது முக்கியம் அல்ல, ஆனால் படிக்கும் போது அதன் பொருள் புரிந்தால் தான் அது அறிவாகும்” என்கிறார். 👉 கதைச் சொல்லும் நேரம்: புரிதலுடன் படிப்பது தான் உண்மையான கல்வி. 🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram! 🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today! 🌟Explore 700+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination. New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🎧 Listen on all platforms → https://linktr.ee/kadhaineram 🌱 Why only Tamil?So your kids ask you the meaning; listen through you; and think in Tamil — in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: guru sishyan story tamil, tamil moral story, tamil kids story, tamil podcast, tamil kathai, kadhaineram, tamil short story, tamil motivation story, tamil wisdom story, life lesson tamil, ashram story tamil, old village story tamil, guru story tamil, tamil kathai neram. 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] குரு சிஷ்யன் கதைகள் படித்தால் மட்டும் போதுமா?
[0:13] பல வருஷத்துக்கு முன்னாடி சிதம்பரத்துல சுந்தரநாதர்
[0:17] அப்படிங்கிற குரு ஒருத்தர் இருந்தாரு.
[0:21] இவரோட குருகுலத்துல பாடம் கத்துக்கறதுக்காக பல மாணவர்கள்
[0:26] அங்க வரது வழக்கம். அப்படி அந்த ஒரு வருஷம் அவர்கிட்ட
[0:31] வந்திருந்த சீடன் அவர்கிட்ட ஒரு சந்தேகம் கேட்டா.
[0:35] குருவே நிறைய நூல்களை படிச்சு கிடைக்கிற அறிவு வச்சுகிட்டு
[0:40] ஒருத்தன் தன்னோட வாழ்க்கைய சிறப்பாக்கிக்க முடியுமா?
[0:44] அப்படின்னு கேட்டான். அவன் அப்படி கேட்டதும் அந்த
[0:48] கேள்விய பாராட்டின குருவோ நீ கேட்ட கேள்வி மிகவும் சிறந்த
[0:53] கேள்வி தான். ஆனா இதுக்கான விடைய நான் இப்ப
[0:57] உடனே சொல்லாம சில நாட்கள் கழிச்சு சொல்றேனே.
[1:01] அப்படின்னு சொன்னாரு. அதுக்கு சம்மதிச்ச எவனும் தன்னோட
[1:05] வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பிச்சா.
[1:08] இப்படியே சில நாட்கள் கழிஞ்சது. அப்போ ஒரு நாள் மாயவரத்துல
[1:14] பட்டமங்கள தெருவுல பெரிய நகக்கடை வச்சிருந்த ஒருத்தரோ அவரோட மகனை
[1:20] அழைச்சிக்கிட்டு இந்த குரு கிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்திருந்தாரு.
[1:25] அப்படி அங்க வந்தவரோ தன்னோட மகன இவன் நிறைய நூல்களை படிச்சவன்
[1:30] அப்படின்னு சொல்லி குருவுக்கு அறிமுகம் செஞ்சு வச்சாரு.
[1:35] அப்படியா மிக்க மகிழ்ச்சி. அப்படின்னு சொன்ன இந்த குருவும்
[1:39] அந்த பையன பாத்து ஒரு கேள்வி கேட்டாரு.
[1:43] இந்த பாருப்பா என் கைக்குள்ள வட்டமான நடுவுல துளையுடைய ஒரு
[1:49] பொருள்ல மறச்சு வச்சிருக்கேன். அது என்னன்னு உன்னால சொல்ல
[1:53] முடியுமா? அப்படின்னு கேட்டாரு.
[1:56] அவர் கையில இருந்ததோ ஒரு மோதரம். இந்த குரு இப்படி கேள்வி
[2:01] கேட்டதும் அந்த வியாபாரியோட மகனும் கொஞ்சம் யோசிக்க
[2:05] ஆரம்பிச்சா. என்ன இருக்கும்?
[2:09] நம்ம ஏதோ பாடத்துல படிச்சமே வட்டமா என்ன இருக்குன்னு.
[2:15] ஞாபகத்துக்கு வந்துருச்சு. அப்படின்னு சொல்லி அவர்கிட்ட
[2:18] அய்யா. உங்க கைக்குள்ள இருக்குறது ஒரு
[2:21] வண்டி சக்கரம் அப்படின்னு சொன்னா அவன் அப்படி சொன்னதும் அத கேட்ட
[2:27] பக்கத்துல இருந்த எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
[2:31] இப்படி எல்லாரும் சிரிச்சத பாத்த இந்த குருவோ அவங்கள பாத்து இந்த
[2:36] பாருங்க. அறியாமையில் பதில் சொல்ற யாரையும்
[2:39] நம்ம கேலி செஞ்சு சிரிக்க கூடாது. அப்படின்னு சொல்லி அங்க
[2:43] வந்திருந்த அந்த வியாபாரியையும் அவரோட மகனையும் ஆசீர்வதிச்சு
[2:48] அவங்க ஊருக்கு அனுப்பி வச்சாரு. அவங்கள ஊருக்கு அனுப்பி வச்சிட்டு
[2:52] தன் கிட்ட கேள்வி கேட்ட அந்த சீடன் அழைச்சாரு.
[2:56] அவன்கிட்ட இப்ப புரிஞ்சுதா கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தா அந்த
[3:01] பையனோ நிறைய நூல்கள் படிச்சு தெரிஞ்சுகிட்டதாக அவனோட தந்தையார்
[3:07] குறிப்பிட்டார். ஆனா வட்டமாக நடுவுல தொலையோட
[3:11] இருக்கிறது. எல்லாமே வண்டி சக்கரம் ஆகாது.
[3:15] அப்படிங்கிற சிந்தனைய அவனோட அறிவு தரவே இல்ல.
[3:19] அதனால தான் இங்க இருந்த எல்லாரோட கேலிக்கும் ஆளானா.
[3:23] அதனால நூல்கள் படிச்சா மட்டும் போதாது.
[3:27] படிச்சத பத்தின தெளிந்த சிந்தனையும் தேவை.
[3:31] அப்படின்னு சொன்னாரு. இந்த கதையிலிருந்து நம்ம என்ன
[3:34] தெரிஞ்சுக்கணும். நம்ம என்ன படிச்சாலும் அதுல என்ன
[3:38] இருக்கு? அப்படிங்குற அர்த்தத்த
[3:41] உள்வாங்கிட்டு படிக்கணும் மேம்போக்காக வேகமாக படிக்கிற
[3:46] நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். அப்படிங்கிற பேர்ல கடகட கடனு
[3:51] படிக்க கூடாது. படிச்ச விஷயங்கள உள்வாங்கிகிட்டு
[3:55] அதுல என்ன இருக்கு அப்படிங்கறத புரிஞ்சுக்கிட்டோம்னா.
[3:59] அத திரும்பவும் நம்ம படிக்க வேண்டிய அவசியமே இல்ல.
[4:03] ஏன்னா அதுவே இல்ல தெளிவாக மனசுல பதிஞ்சிடும்.
[4:08] அதனால வேகமாகவும் நிறைய புத்தகங்கள் படிக்கிற அப்படின்னு
[4:12] இல்லாம கொஞ்சம் படிச்சாலும் அதுல என்ன இருக்கு அப்படிங்கிறது
[4:17] தெளிவாக புரிஞ்சுக்கிட்டு படிக்கணும்.
[4:20] சரியா? அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
