# 729 | 20 - முதல் நாலடிப் பயணம் | தன்னம்பிக்கைக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 11 Aug 2025, 4:55.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/106701090/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-11%2F694c49c6-2ee9-d8bd-62bc-a5e5ed881c52.mp3

இந்த உத்வேகமூட்டும் எபிசோடில், சென்னையில் கல்லூரி மாணவரான ராஜுவின் கதையைப் பகிர்கிறோம். பெரிய கனவுகளும், ஆனால் தொடங்குவதற்கு பயமும் கொண்ட ராஜு, மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் தனது குருவிடமிருந்து ஆழமான பாடம் பெறுகிறார். நான்கு அடி மட்டுமே ஒளிரும் ஒரு சிறிய விளக்குடன், ராஜு தனது இலக்கை நோக்கி முதல் படியை எடுக்க கற்றுக்கொள்கிறார். பயத்தை வெல்வது மற்றும் சிறிய தொடக்கங்களின் ஆற்றலைப் பற்றி இந்தக் கதையைக் கேளுங்கள். 🧒 Perfect for children aged 4–12 📚 Ideal for bedtime, classroom, or parenting moments 💛 Part of the 725+ episodes in KadhaiNeram Tamil Kids Podcast 🌐 Explore all episodes at: https://linktr.ee/kadhaineram 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Motivation story tamil, tamil inspirational story, tamil podcast story, tamil guru story, life lesson tamil, motivational tamil podcast, tamil kids moral story, success story tamil, chennai hostel life, guru and student story tamil, kadhai neram tamil, tamil bedtime story, inspirational story for students tamil 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] தன்னம்பி கை கதைகள் முதல். நாளடி பயணம்.
[0:13] சென்னை, மயிலாப்பூர்ல விவேகானந்தா கல்லூரி இருக்கு.
[0:18] இந்த கல்லூரில பல வருஷத்துக்கு முன்னாடி ராஜூ அப்படின்னு ஒரு
[0:23] பையன் படிச்சிட்டு வந்தா. அந்த கல்லூரிக்கும் அந்த
[0:28] கல்லூரியோட விடுதிக்கும் சுவாமி ஆத்ம கருணாநந்தா அப்படிங்கிற
[0:32] ஒருத்தர் தலைமை தாங்கி இருந்தாரு. அவர் கூட இந்த ராஜு பேசுறது
[0:38] வழக்கமாக இருந்துச்சு. அந்த கல்லூரி விடுதி இல்ல
[0:42] வழக்கமாக காலைல ஆறு மணிக்கெல்லாம் பிரார்த்தனை கூட நடக்கிறது
[0:47] வழக்கம். அப்படியே இந்த பிரார்த்தனை கூடத்த
[0:51] ஒரு நாள் முடிச்சுக்கிட்டு வெளிய வரும் போது தன்னோட குருவோட இந்த
[0:56] ராஜு பேசிக்கிட்டே வந்தா அப்படி அவர் கூட பேசிட்டு இருக்கும்போது
[1:02] குருவே என் லட்சியத்தை நோக்கின. பயணம் ரொம்ப நீண்டது.
[1:07] அதனால என்னோட வழியில என்னென்ன இடர்பாடுகள் வரும் அப்படின்னு
[1:12] எனக்கு தெரியல. அதனால என்னோட பயணத்தை தொடங்கவே
[1:17] பயமா இருக்கு. அப்படின்னு சொன்னா இவன் இப்படி
[1:21] சொன்னதும் அத கேட்டு அந்த குருவோ அதுக்கு எந்த பதிலும் சொல்லாம வேற
[1:26] விஷயங்கள பத்தி பேசிட்டு இருந்தாரு.
[1:29] அப்புறம் அவன் தன்னோட விடுதி அறைக்கு போகவும் கொஞ்ச நேரம்
[1:33] செய்தித்தாள் எல்லாம் படிச்சிட்டு புத்தகத்தை எல்லாம் படிச்சுட்டு
[1:36] நல்லா தூங்கி எழுந்து சாயந்திரம் திரும்பவும் பிரார்த்தனை
[1:40] கூடத்துக்கு போனா அங்க சாயந்திரமும் கூட பிரார்த்தனை
[1:44] நடக்கும். அப்படி அத முடிச்சதுக்கு அப்புறம்
[1:48] ராத்திரி சாப்பாடு சாப்பிடுறதுக்காக விடுதியோட
[1:51] உணவகத்துக்கு போனா. சாப்பிட்டு முடிச்சிட்டு தன் அறைய
[1:55] நோக்கி நடக்கலாம். அப்படின்னு வெளிய வந்தவனுக்கு
[1:59] டப்பால்னு பயங்கர இருட்டு மின்சாரம்
[2:02] துண்டிக்கப்பட்டிருந்துச்சு அந்த சமயம்.
[2:06] தன்னோட குரு அந்த இடத்துக்கு ஒரு விளக்கு எடுத்துட்டு வந்தாரு.
[2:11] இருட்டுல ரொம்ப தூரம் இருந்த தன்னோட அறைக்கு எப்படி போகிறது
[2:15] அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்த இந்த ராஜு கிட்ட இந்த
[2:19] குருவோ தன் கையிலிருந்த அந்த விளக்க கொடுத்தாரு.
[2:23] அதுவோ ஒரு சின்ன விளக்காக இருந்தது.
[2:27] அதுல இருந்து வந்த வெளிச்சத்துல நாலு அடி தூரம் தான் தெரிஞ்சது.
[2:32] இத வச்சுக்கிட்டு எப்படி நம்ம அறை வரைக்கும் போகிறது அப்படின்னு
[2:36] நினைச்சுட்டு இருந்தவங்கிட்ட இந்த குருவோ இந்த பாரு இந்த விளக்க
[2:41] வச்சுக்கிட்டு நாலு அடி தூரம் பயம் இல்லாம போகலாம்.
[2:45] நீ ஒவ்வொரு அடியாக முன்னேற முன்னேற அங்கிருந்து நாலு அடி
[2:50] தூரம். அதுக்கப்புறம் அங்கிருந்து
[2:53] இன்னொரு நாள் அடி தூரம் அப்படின்னு வழி தெரிஞ்சுகிட்டே
[2:57] இருக்கும். அப்படியே போயி உன்னோட விடுதி அரை
[3:01] அணி அடைஞ்சிடலாம். ஆனா, மொதோ நாளடி தூர பயணத்தை
[3:05] தொடங்குகிறது. உன் கைல தான் இருக்கு.
[3:08] அப்படின்னு சொன்னாரு. இப்படி தன் குரு கிட்ட இருந்து
[3:12] இந்த விளக்க வாங்கிட்டு தன் அறைய நோக்கி பொறுமையா நடந்து
[3:17] போகும்போது தான் இந்த ராஜூவுக்கு விபரம் புரிஞ்சுது.
[3:21] தன்னோட குரு கொடுத்த அந்த விளக்கம் விளக்கமும் அவனோட அறைய
[3:26] நோக்கி அவன் போறதுக்கு மட்டும் கிடையாது.
[3:29] அன்னைக்கு காலைல அவர்கிட்ட சொன்னேன்.
[3:31] தன்னோட அந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கின.
[3:34] பயணத்துக்கும் கூட தனக்கு உயர்ந்த லட்சியங்களும் உயர்ந்த
[3:39] நோக்கங்களும் இருந்தா மட்டும் பத்தாது.
[3:42] அதுக்கான காரியங்கள்ல அதுக்கான செயல்கள்ல முதல்ல ஈடுபடனும்.
[3:47] தன் லட்சியத்தை நோக்கின பயணத்துக்கு தான் மொதோ அடி
[3:51] எடுத்து வச்சா தான் எத்தனை இடர்கள் வரும்?
[3:53] அது எப்படி சமாளிக்கலாம். அப்படிங்கிற விஷயத்தை
[3:56] புரிஞ்சுக்கிட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வச்சு தன்னோட லட்சிய
[4:00] பயணத்தை அடையலாம். அப்படிங்கிற விஷயத்த அப்பதான்
[4:04] நல்லா புரிஞ்சுக்கிட்டா. இந்த கதையிலிருந்து நம்ம என்ன
[4:08] தெரிஞ்சுக்கணும். நம்பளும் எவ்வளவு உயர்ந்த
[4:11] குறிக்கோள், எவ்வளவு உயர்ந்த லட்சியங்கள் வச்சிருந்தாலும் ஆஹா
[4:16] நம்பளால் அது அடைய முடியுமா? இதை செய்யறதுக்குள்ள நமக்கு
[4:20] என்னென்ன பிரச்சனை வருமோ அப்படின்னு பல விஷயங்கள
[4:24] முன்னாடியே மனசுல போட்டு கஷ்டப்படுத்திக்க கூடாது.
[4:28] நம்மளால முடிஞ்ச முயற்சிய நம்ம அதுல முழுசாக செலுத்தி அத நோக்கி
[4:33] நம்மளோட பயணத்த தயக்கம் இல்லாம நம்ம ஆரம்பிக்கணும்.
[4:37] அப்படி அந்த பயணத்தை ஆரம்பிச்சு அதுல நம்மளோட கவனத்தை முழுசாக
[4:41] செலுத்தினோம்னா எதிர்ப்படும் இடர்கள் எல்லாம் தானாக
[4:45] பொடிப்பட்டு போயிடும். சரியா அவ்வளவு.
[4:49] தான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
